Skip to main content

பேருந்து முதல் அரசு அறிக்கைவரை காவிநிறம்! - யோகியின் அட்ராசிட்டீஸ்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
பேருந்து முதல் அரசு அறிக்கைவரை காவிநிறம்! - யோகியின் அட்ராசிட்டீஸ்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து அனைத்தும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.



உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யாத், சாதாரணமாகவே காவி உடையில் சாமியாரைப் போல காட்சியளிப்பவர். முதல்வர் அலுவலகத்தில் அவர் அமரும் இருக்கை, அவருக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள கார் என அனைத்து இடங்களிலும் காவி நிறங்களில்தான் அலங்கரிக்கப்படுகின்றன.

சமீபத்தில் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளிப்பைகளை காவி நிறத்திற்கு மாற்றியிருக்கிறது அம்மாநில அரசு. முன்னதாக, பள்ளிப்பைகளில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நேற்றுமுன்தினம் உபி. மாநில போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 50 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றையும் காவி நிறத்திலேயே பெயிண்ட் அடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த விழாவில் அலங்கரிப்புகளில் கூட காவி நிறத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

உபி. மாநிலத்தில் யோகியின் 100 நாள் ஆட்சி குறித்து வெளியிடப்பட்ட புத்தகம் காவி நிறத்தில் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. மேலும், உபி. பள்ளிப்பைகளில் பகுஜன் சமாஜ்வாதி ஆட்சியில் நீலநிறம் இடம்பெறுவதும், சமாஜ்வாதி ஆட்சியில் சிவப்பும், பச்சையும் இடம்பெறுவதும் வழக்கம்தான் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். 

இது இப்படி இருக்க தமிழக அரசு சார்ந்த அறிக்கைளில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த பச்சை நிறம், காவியாக மாறியிருப்பதை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வதோ?

சார்ந்த செய்திகள்