Skip to main content

செவிலியரின் உயிரை பலிவாங்கிய சிக்கன்!

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

Nurse passed away after eating chicken in Kerala

 

கேரளாவின் கொச்சி மாநகரில் கடந்த ஆண்டு ஓட்டலில் ஷவர்மா சிக்கன் சாப்பிட்ட மாணவி மரணமடைந்தது பரபரப்பும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதன் தாக்கம் மறையும் முன்பாக தற்போது அடுத்த மரணமும் ஏற்பட்டு கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த ரஷ்மி(35) அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸாக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரஷ்மி கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அல்ஃபாம் சிக்கன் 65 மற்றும் குழிமந்தி பிரியாணி இரண்டும் சாப்பிட்டுள்ளார். இவற்றைச் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக ரஷ்மிக்கு வாந்தி மற்றும் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம், அதே ஒட்டலில் சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படவே அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கோட்டயத்தை அதிர வைத்திருக்கிறது.

 

இந்நிலையில், ரஷ்மியின் உடல்நிலை மோசமடையவே, பின்னர் அவர் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார். இதையறிந்த சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கோட்டயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த சம்பவம் முதல் முறையல்ல. இது இரண்டாவதாக நடந்த சம்பவம். இதற்கு முன்பு இதே ஓட்டலில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் கோட்டயம் நகரசபை அதிகாரிகள் ஓட்டலை மூடி சீல் வைத்தனர். பின்னர், மீண்டும் ஓட்டல் திறக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்நிகழ்வுக்கு நாள் கடந்த இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து பதப்படுத்திய நிலையில் தயார் செய்யப்பட்ட சிக்கன் உணவுகளே காரணம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். சிக்கன் சாப்பிட்ட நர்ஸின் மரணம் கோட்டயத்தில் திகிலைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்