Skip to main content

முதல் 10 கோடி தடுப்பூசிகள் மட்டுமே 200 ரூபாய் - சீரம் நிறுவனம் அறிவிப்பு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021
seum ceo

 

 

நாடு முழுவதும் ஜனவரி 16- ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. இதற்காக இன்று புனேவில் இருந்து 9 விமானங்கள் மூலம் 56.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பாட்னா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டது.

 

இந்தநிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்துள்ள சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, முதல் 10 கோடி டோஸ்கள் மட்டுமே, இந்திய அரசுக்கு 200 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர்,பொது மக்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரை ஆதரிக்க நாங்கள் விரும்புகிறோம் என்ற இந்திய அரசின் கோரிக்கையின் பேரில், அவர்களுக்கு மட்டும் முதல் 100 மில்லியன் (10 கோடி) டோஸ்களுக்கு ரூ200 என்ற சிறப்பு விலையை வழங்கியுள்ளோம். அதன்பிறகு நாங்கள் அதனை வெளிச்சந்தைகளில் ரூ1000க்கு விற்பனை செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் முதல் 10 கோடி டோஸ்களுக்கு பிறகு, இந்திய அரசுக்கு நியாயமான விலையில் கரோனா தடுப்பூசியை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் "இந்திய அரசுக்கு, நாங்கள் நியாயமான விலையை பராமரிப்போம், ஆனால் அது ரூ200 ஐ விட சற்று அதிகமாக இருக்கும், அது தடுப்பூசி தயாரிப்பதற்கான செலவு விலை. எந்த லாபமும் சம்பாதிக்க வேண்டாம் என முடிவுசெய்து, முதல் 100 மில்லியன் அளவுகளுக்கு தேசத்தையும் இந்திய அரசாங்கத்தையும் ஆதரிக்க விரும்பினோம்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்