Published on 31/03/2021 | Edited on 31/03/2021
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். 123 நாட்களைக் கடந்தும் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.
இதுவரை நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த சாதகமான முடிவும் இருதரப்பில் இருந்தும் எடுக்கப்படவில்லை. இந்தப் போராட்டம் காரணமாக சாலைகளில் விவசாயிகள் அமர்ந்துள்ளதால், 850 கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்க முடியாமல் உள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.