இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள் உள்ளிடவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகள், இந்தியாவிற்கு மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி வருகின்றன.
அந்த வகையில் தற்போது மேலும் மூன்று நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் உபகரணங்களை வழங்கியுள்ளன. தென்கொரியா, 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 30 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் ஆகியவற்றை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. இங்கிலாந்து நாடு, 1,000 வெண்டிலேட்டர்களையும் 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களையும் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர் ஒவ்வொன்றும் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல், 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 400 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் 360 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றையும், இங்கிலாந்து 1,000 வெண்டிலேட்டர்கள், 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றையும் அனுப்பியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.