Skip to main content

இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

dhananjay munde

 

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ராவில்தான் அதிக அளவிலான கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 30,535 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மஹாராஷ்ட்ரா அரசு, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த வருடம் ஜூன் மாதத்தில் முதன்முதலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட, சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

 

மஹாராஷ்டிராவில் நேற்று (23.03.2021) ஒரே நாளில் 28,699 பேருக்கு கரோனா உறுதியானது. அதேநேரத்தில் 13,165 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்