Published on 10/01/2019 | Edited on 10/01/2019

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 8.22 மணியளவில் லேசான பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தின் மையம் லெஹ் நகரத்திற்கு வடக்கே 63.6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்று பேரழிவு மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.