டெல்லியில் கடுமையாக புழுதிப் புயல் வீசி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி மாநகரின் பகுதியில் பல்வேறு பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பல அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கொடுத்திருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகால வெப்பநிலை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதி புயல் வீசி வருகிறது.
பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவோர் இதனால் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துள்ளனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக பல இடங்களில் குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் டெல்லி பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.