
இந்தியகிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன்சவுரவ்கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இதய அடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வீட்டில்ஓய்வெடுத்து வருகிறார். அதேசமயம்மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் மார்ச்27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதனையொட்டி மேற்கு வங்க அரசியல் சூழ்நிலை, தொடர்ந்து பரபரப்பாகவேஇருக்கிறது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திரமோடி, மார்ச்7 ஆம் தேதி மேற்கு வங்கத்தில்பாஜக சார்பில் நடைபெறும்பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார். அப்போது கங்குலி, பிரதமர் மோடி தலைமையில் பாஜகவில் இணைவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து அம்மாநில பாஜக, கங்குலிபேரணியில்கலந்துகொள்வது குறித்துஅவர்தான்முடிவெடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்கபாஜகவின்செய்தித் தொடர்பாளர்,சவுரவ் வீட்டில் ஓய்வில் இருப்பது எங்களுக்குத் தெரியும். கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்துஅவர் யோசித்தால், உடல்நலம் மற்றும் வானிலைஅனுமதித்தால், அவர் மிகவும் வரவேற்கப்படுகிறார். அவர் அங்கு இருந்தால், அவர் அதை விரும்புவார் என்று நாங்கள் நினைக்கிறோம். கூட்டத்திற்கும் அது பிடிக்கும். ஆனால் இதுகுறித்து அவர்தான்முடிவெடுக்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)