Skip to main content

4 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை; கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

droupadi murmu action taked four years old maharashtra girl incident

 

மகாராஷ்டிராவில் கடந்த 2008 ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த வசந்த சம்பத் துபாரே (அப்போதைய வயது 55) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கற்களால் தாக்கி சிறுமியைக் கொலை செய்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம் சம்பத் துபாரேவுக்கு 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் மும்பை உயர்நீதிமன்றமும் விசாரணை நீதிமன்ற விதித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கடந்த 2017 ஆண்டு சம்பத் துபாரேவின் மனுவை தள்ளுபடி செய்து அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.

 

இறுதியாக சம்பத் துபாரே தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்த இந்த மனுவை குடியரசுத் தலைவர் செயலகம் கடந்த மார்ச் 28 ஆம் தேதி கருணை மனு குறித்த பரிந்துரையைப் பெற்றது. அதன் பின்னர் துபாரேவின் கருணை மனு குடியரசுத் தலைவரால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாக கருணை மனுவின் நிலை குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாரேவின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்