அங்கிள் என்ற தன்னை எவ்வாறு அழைக்கலாம் என்று கூறி இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தாக்கிய சம்பவம் உத்தராகண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் மோஞ்சி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கீதா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், பேட்மிண்டன் விளையாடுவதில் மாவட்ட அளவில் சிறந்த வீரராக உள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் நூற்றுக்கணக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். கல்லூரிகளுக்கு இடையேயான அனைத்து போட்டிகளுக்கும் கல்லூரியின் சார்பில் முதல் ஆளாக இவர் கலந்துகொண்டு பரிசுகளை குவித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரிகளுக்கு இடையே சில நாட்களில் மீண்டும் போட்டி நடைபெற உள்ளதால் அதற்காக புதிய ராக்கெட் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஒரு கடையில் விளையாட்டு கருவிகள் சிறப்பாக இருக்கும் என்று மாணவிகள் கூறியது அவருக்கு நினைவுக்கு வரவே, அந்த கடைக்கு சென்று ராக்கெட் மாடலை காட்டுமாறு கேட்டுள்ளார். இவர் உள்ளே சென்று கடைக்காரரை அங்கிள் எனக்கு ராக்கெட் மாடலை காட்டுங்கள் என்று கூறியதும், உடனடியாக கோபப்பட்ட அந்த கடைக்காரர் 35 வயதான நான் அங்கிளா? என்று கூறி அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.