மத்திய அரசின் புதிய சட்ட திருத்தமான தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர்.
மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும், இந்த சட்ட திருத்தும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து இந்த புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.