பிச்சைக்காரர்கள், ஆதரவற்றவர்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் மருத்துவர் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மருத்துவர் அபிஜீத் சோனவானே. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, கோல்விகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் பிச்சை எடுக்கும், வீடுகளின்றி தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துவருகிறார். அவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கும் இவர், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் பராமரிக்கிறார்.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சேவையை செய்துவரும் அபிஜீத், சோஹம் அறக்கட்டளை ஒன்றின் மூலம் கிடைக்கும் நிதியை ஆதரவற்றவர்களின் மருத்துவத்திற்காக செலவிடுகிறார். தன்னால் இயன்றவரை சமூகம் தனக்கு வழங்கியதை, சமூகத்திற்கே திரும்பத் தரவேண்டும் என என்னும் மருத்துவர் அபிஜீத், தான் சிகிச்சை அளித்து காப்பவர்களை ‘இனி பிச்சை எடுக்கவேண்டாம், மாறாக வேலை ஏதாவது தேடி பிழைப்பு நடத்துங்கள்’ என வலியுறுத்துவாறாம். பலரும் அபிஜீத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுயமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தன்னை பிச்சைக்காரர்களின் மருத்துவர் என ஊரார் அழைக்க, அதை புன்னகைத்தபடி ஏற்றுக்கொள்ளும் அபிஜீத் மனிதநேயம் மரிக்கவில்லை என்பதை அழுத்தமாக உணர்த்துகிறார்.