Skip to main content

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்... பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை!

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

புதுச்சேரியில் 'பொலிவுறு நகரம்' திட்டத்தின் கீழ் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஈஸ்வரன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். காந்தி வீதி, ஈஸ்வரன் கோவில் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சிறிய புத்தக சந்தையை நகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

மேலும் தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கோரி பாதிக்கப்பட்ட வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படாமல் அகற்றுவதாகவும் குற்றம் சாட்டினர். ஆனால் நகராட்சி சார்பில் அனைவருக்கும் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். சிலருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், பலருக்கு அனுப்பப்படவில்லை எனவும்,  திடீரென  கடையை அகற்றியதால் வாழ்வாதாரம் பாதிப்பது மட்டுமின்றி நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.  ஆனால்  நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

 

காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்