மூன்று மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்காத ரேசன் அட்டைகளை ரத்து செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஷ் பசுவான்,
மூன்று மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்காத ரேசன் அட்டைகளை ரத்து செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேசன் பொருட்களின் தேவையை பெற விரும்பாதவர்கள், ரேசன் பொருட்கள் வாங்காத வசதி படைத்தவர்கள் போன்றவர்களின் ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்படும்.
ரேசன் பொருட்களை ரேசன் கடைகளுக்கு சென்று வாங்க இயலாத முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் நாட்டில் உள்ளனர். அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் வழங்கப்படும் ரேசன் பொருட்களை வாங்க முடியாமல் யாரும் பட்டினி மரணம் அடையக்கூடாது என அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.