Published on 30/08/2019 | Edited on 30/08/2019
2018-19 ஆம் நிதியாண்டில் வங்கிகளில் நடைபெறும் மோசடிகள் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த நிதியாண்டில் மட்டும் நாட்டில் உள்ள வங்கிகளில் 71,543 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தமாகவே 41,167 கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி நடந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் 71,543 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 74 சதவீதம் ஆகும்.
மேலும் முந்தைய நிதியாண்டை விட 15% அதிகமாக வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல மோசடி நடந்து சராசரியாக 22 மாதங்கள் கழித்துதான் வங்கிகள் மோசடி நடந்திருப்பதையே கண்டுபிடிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.