Skip to main content

கரோனா தொற்று பரவல்- நம்பிக்கையளிக்கும் தாராவி..

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
dharavi

 

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று, மும்பையின் தாராவி பகுதியை மட்டும் விட்டு வைக்கவில்லை. தமிழர்கள் அதிகம் வசித்து வரும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில், கரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துவது கடினமாக ஒன்றாக இருப்பதால் மே மாதத்தில் கரோனா பரவல் தீவிரமானது.
 

 

இதையடுத்து அங்கு  கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. உலக சுகாதார அமைப்பும், மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியான தாராவியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது புதிய நம்பிக்கையை தருவதாக கூறி பாராட்டு தெரிவித்திருந்தது.

 

இந்தநிலையில் நேற்று தாராவி பகுதியில் நடைபெற்ற கரோனா பரிசோதனையில், யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்பு, அப்பகுதியில் கரோனா உறுதி செய்யப்படாத நாள் நேற்றுதான்.

 


இந்தியாவின் மிகவும் மக்கள் நெருக்கமான பகுதியில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது.  

 


 

சார்ந்த செய்திகள்