இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார் .
இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் முறையாகும்.
இந்நிலையில், 'என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தி, பொருளாதார உறவு, கல்வி, கலாச்சாரம் குறித்த விஷயங்கள் குறித்து பேசினோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது மக்களுக்கு வழிகாட்டுகின்றன. பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக எமது உறவு மேலும் வலுப்படும்'' என தமிழில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.