
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய கரோனாவின் இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தையும் கடந்து சென்றது. இந்நிலையில், தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்தியாவில், வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கான்பூர் ஐஐடி குழு வல்லுநர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். அதில், "இந்த மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவது என்பது தடுப்பூசியை விரைவுபடுத்துவதன் மூலமே சாத்தியம். தற்போது நாடு முழுவதும் 7.5 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்கள். எனவே இதே நிலை நீடித்தால் அக்டோபர் மாதத்தின் இறுதியில் தினசரி மாதிப்பு 2 லட்சத்தை நெருங்க வாய்ப்புள்ளது" என கூறியுள்ளனர்.