மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. மேலும் செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடியும் ஏற்றப்பட்டது.
ட்ராக்டர் பேரணியில் காவல்துறையினர் விதித்த விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் விவசாயிகள் மீறியதால் வன்முறை நடந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் நிபந்தனைகளை மீறியது தொடர்பாக விளக்கம் கேட்டு, யோகேந்திர யாதவ், பல்தேவ் சிங் சிர்ஸா, பல்பீர் எஸ் ராஜீவால் உள்ளிட்ட 20 பேருக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த நோட்டீஸிற்கு அவர்கள் மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுக்கு எதிராக லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவும், அவர்களது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.