முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். பிரபல இந்தி பத்திரிகை ஒன்று சமீபத்தில் கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில்தான் பிஸியாக இருக்கிறார் என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய செயல்திறன் குறித்து தவறான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “நீங்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் இருப்பவர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.