Skip to main content

டெல்லி மாசுவுக்கு நான் ஜிலேபி சாப்பிட்டதுதான் காரணமா? கொந்தளித்த கௌதம் கம்பிர்...

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதியின் எம்.பி யான கௌதம் கம்பிர் ஜிலேபி சாப்ப்டுவதுபோல் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டதற்கு சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினார்.
 

jileby

 

 

டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை சமீப காலத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிக்க நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இக்குழுவின் உறுப்பினரான கௌதம் கம்பிர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு கமெண்ட்ரி கொடுப்பதற்காக இந்தூருக்கு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 15ஆம் தேதி மாசு தொடர்பான கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கம்பிர் இந்திய அணியின் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை கடுமையான விமர்சித்து, ட்விட்டரில் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செயதனர். 

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கௌதம் கம்பிர் என்னுடைய தொகுதியில் என்னால் முடிந்த நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அப்போது நான் பாண்டில் இருந்ததால் கமெண்ட்ரி கொடுக்க செல்வதை தவிர்க்க முடியவில்லை என்றார். இதன்பின்னும் கௌதம் கம்பிர் குறித்து விமர்சனங்கள் கடுமையாக எழ தொடங்கியது. டெல்லியில் கம்பிர் ஜிலேபி சாப்பிடும் போஸ்டர்களை ஒட்டி விமர்சித்து வருகின்றனர்.

இதனால் கடுப்பான கம்பிர்,  “நான் ஜிலேபி சாப்பிடுவது தான் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு காரணம் என்றால், ஜிலேபி சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறேன். நீங்கள் என்னை 10 நிமிடத்தில் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள். ஆனால், டெல்லியில் மாசுபாட்டை சரிசெய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருந்தால், இன்று நாங்கள் தூய்மையான காற்றை சுவாசித்திருப்போம்” என்று கொந்தளிப்புடன் பேட்டியளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்