அரபிக் கடலில் சமீபத்தில் உருவான டவ்தே புயல் கர்நாடகா, கோவா, மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைத் தாக்கியது. அதன்பிறகு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (24.05.2021) புயல் உருவாகும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே கணித்திருந்தது. மேலும், அந்தப் புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் பரவலான மழை இருக்குமென்றும், அந்தப் புயல் ஒடிசா - மேற்கு வங்கத்திற்கிடையே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிததாக உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு ‘யாஷ்’ என பெயரிடப்படவுள்ளதும், இந்தப் புயலால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பரவலான மழை இருக்குமென்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.