தீண்டாமை இழைக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரை ,மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று சிறப்புப் பூஜை செய்து வழிப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சாமி சிலையைத் தொட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினருக்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, தீண்டாமை கொடுமை குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் வெங்கடராஜா அந்த சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினரை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோயில் கதவு பூட்டுப் போட்டிருந்த நிலையில், பூட்டை உடைத்து அனைவரும் உள்ளே சென்றுள்ளனர். பிறகு சிறுவனின் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுள்ளார்.
21- ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமையை அனுமதிக்கக் கூடாது எனக் கூறிய மாவட்ட ஆட்சியர், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.