கடந்த வாரம டிட்லி புயல் கரை ஒதுங்கியதால் ஒடிஷா மற்றும் ஆந்திர மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தை அடுத்து சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. கடந்த 11ஆம் தேதி ஒடிஷா மாநிலம், அதக்புர் கிராமத்திலும் வெள்ளம் ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த முகுந்த் டோரா(40) என்பவரின் ஏழுவயது மகள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டார். அதனை அடுத்த 17ஆம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், போலிஸார் பபிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக 15 கிமீ தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், மருத்துவ நிர்வாகமோ பணம் இல்லாமல் ஆம்புலன்ஸ் அனுப்ப இயலாது என்று பபிதாவின் தந்தையிடம் தெரிவித்துவிட்டனர். ஏற்கனவே மகளை இழந்த சோகத்தில் இருந்தவர். விரக்தியின் உச்சத்திற்கு சென்று ஒரு சாக்குப்பையில் தனது மகளின் உடலை போட்டுக்கொண்டு, அதை சுமந்துகொண்டு நடந்தே சென்றுள்ளார். எட்டு கிமீ தொலைவு வரைக்கும் நடந்துசென்றள்ளார். அப்போது அவரை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இச்சம்பவத்தை பரப்பியுள்ளனர். பின்னர், இதை கேள்விப்பட்ட போலிஸார், ஒரு ஆட்டோவை எடுத்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.