Published on 16/10/2019 | Edited on 16/10/2019
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அவர் அமித்ஷாவை சந்தித்து அரசியலில் சேர விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
மேற்குவங்க மாநிலத்தில் கங்குலியை வைத்து மம்தா பானர்ஜியை தோற்கடிக்க பாஜக திட்டமிடுவதாகவும் சமூகவலைதளங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை முதல் முறையாக அண்மையில் தான் சந்தித்ததாகவும், அப்போது, அரசியலில் சேர்வது குறித்தோ, பிசிசிஐ தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை என்று கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.