Published on 25/03/2020 | Edited on 25/03/2020
நேற்று இரவு 8 மணிக்கு இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில்,

கரோனாவை சமாளிக்க சமூக விலகல் தான் ஒரே தீர்வு,கரோனா நம்மை தாக்காது என்று யாரும் என நினைக்க கூடாது. கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தபடுகிறது. குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கு பின்பற்ற வேண்டியது முதல்கட்ட தேவையாக இருக்கிறது. இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக செயல்படுத்த வேண்டும். ஒருவருக்குத் தெரியாமலேயே கரோனா அவரை தொற்றக்கூடும் கவனமாக இருங்கள் எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இந்தியாவில் பிரதமர் அறிவித்தபடி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.