
தன்னுடைய 16 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து தந்தை ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கடாக் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனது தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், இவருடைய காலில் திடீரென்று வீக்கம் ஏற்பட்டதால் இவருடைய தாய், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் 31 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தாய், மகளிடம் இது குறித்து விசாரித்தார். அப்போது, கடந்த 1 வருடமாக வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தந்தையால் தான் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தந்தை மிரட்டியதாகவும் கூறினார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், 51 வயது தந்தை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்படவும், முழு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், முழு மருத்துவ பரிசோதனை அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க உதவும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தனது தாயார், செவிலியராக பணிபுரியும் 20 வயது மூத்த சகோதரி மற்றும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் ஒரு தம்பியுடன் வசிக்கிறார்.