Skip to main content

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிபிஎம் எம்.பி. சஸ்பெண்ட்!

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிபிஎம் எம்.பி. சஸ்பெண்ட்!



கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகளுக்கு மாறாக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த மேற்குவங்க சிபிஎம் எம்.பி. கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேற்கு வங்க சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர் ரிடாப்ரதா பானர்ஜி. மாநிலங்களவை உறுப்பினரான இவர் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர்.

ஆனால், இவருடைய வாழ்க்கை முறை கம்யூனிஸ்ட் நடைமுறைகளுக்கு மாறாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அவருடைய கடந்த ஆண்டு பயணச்செலவு மட்டும் 69 லட்சத்து 25 ஆயிரம் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது.

இதையடுத்து அவரை மூன்று மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து மாநிலக்குழு உத்தரவிட்டுள்ளது.

அவர் ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச், மோன்ட் பிளாங்க் பேனா ஆகியவற்றை பயன்படுத்துவதாக கட்சி உறுப்பினர்கள் புகார் செய்தனர். மோன்ட் பிளான்க் பேனாவின் விலை சுமார் 35 ஆயிரம் ஆகும்.

அவர்மீது விசாரணை நடத்த மாநிலக்குழு ஒரு கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டியிடம் அவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பொறுத்து மேல்நடவடிக்கை இருக்கும் என கருதப்படுகிறது.

சார்ந்த செய்திகள்