Skip to main content

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்த குற்றவாளி; பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்!

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
The court ruled sensational to Convict who married the girl incident

ராஜஸ்தான் மாநிலம், பூந்தி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தனது 17 வயது மகளை காணவில்லை என தந்தை ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். சுமார் 1 மாதத்திற்கு பிறகு, சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கவுஷல் ராஜ் (26) என்ற இளைஞரை கைது செய்தும் சிறுமியையும் கண்டுபிடித்து மீட்டனர். 

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், போலீசாரால் கைது செய்யப்பட்ட கவுஷல் ராஜ், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த கவுஷல் ராஜ், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு அவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை இன்று பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கவுஷல் ராஜுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், 80,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். ஆனால், வழக்கு விசாரணையின் போது கவுஷல் ராஜ் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்