இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும்பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட இத்தடுப்பூசி, மார்ச் ஒன்றாம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் 45 மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுதியான அனைவரும், உடனடியாக தங்கள் பெயரை பதிவு செய்துகொண்டு, கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.