![kl;](http://image.nakkheeran.in/cdn/farfuture/lvkVKI2ZbZ3lAK4msoIupdOkXesdxSuotALtzYMjTD8/1603073038/sites/default/files/inline-images/12345_36.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கரோனா வேகமாக மற்ற நாடுகளில் பரவி வருகிறது. உலகளவில் 4.02 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3.01 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.18 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது வரை 75 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த் தொற்றில் இருந்து இதுவரை 66 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.