பெங்களுருவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் நாடு வானில் மோதி வெடித்து சிதறியுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வான்படை கண்காட்சி நிகழ்ச்சியான 'ஏரோஇந்தியா 2019' நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பெங்களுருவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் எலஹங்கா விமானதளத்தில் இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த சூர்யாகிரண் விமானங்கள் வானில் பறந்து ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வானிலே மோதி வெடித்தன. இதிலிருந்து விமானிகள் இருவரும் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பியுள்ளார். வெடித்து சிதறிய விமானங்கள் இஸ்ரோ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் அந்த இடத்தில் இருந்த ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் விழுந்த இடத்தில பயங்கர தீ ஏற்பட்டுள்ள நிலையில் அதனை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.