Skip to main content

கேரளாவில் தொடரும் சோகம்... 720 பேருக்கு புதிதாக தொற்று உறுதி!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
g

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. 

 

இன்று மட்டும் கேரளாவில் 720 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 112 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 97 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் கேரளா வந்தவர்கள். இன்று மேலும் இருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 41 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,994 ஆக உயர்ந்துள்ளது. இன்று 120 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,938 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று ஏற்றுபட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 8,056 ஆக உள்ளது. மாநிலத்தில் சில இடங்களில் கரோனா சமூக பரவலாக மாறியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்