Published on 30/03/2019 | Edited on 30/03/2019
இஸ்ரோ அம்மைப்பின் முன்னாள் தலைவரான மாதவன் நாயருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.
![death thread for former isro chairman madhavan nair](http://image.nakkheeran.in/cdn/farfuture/AY3FFACsew-t9fJRUTUtbKMSFXnVmmxykqc4Ykcanr8/1553922493/sites/default/files/inline-images/0Madhavan_Nair_h-std.jpg)
75 வயதான மாதவன் நாயர் கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பாஜக வில் இணைந்தார். இந்நிலையில் தற்போது இவரது வீட்டிற்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பெயரில் வந்துள்ள அக்கடிதத்தில் பாஜக வுக்கும், மோடிக்கும் ஆதரவு கொடுத்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மாதவன் நாயர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.