
தமிழகத்தில் இன்று 7,427 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 439 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 4வது நாளாக தொடர்ந்து 500க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 24,29,924 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 15,281 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 23,37,209 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 189 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 31,386 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,70,923 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 3,13,40,264 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.