
இந்தியாவில் இதுவரை 23,29,638 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இதுவரை கரோனாவிற்கு 46,091பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 16,39,000 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 56,110 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்த 6,43,000 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரேநாளில் இந்தியாவில் 60,963 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரோனாவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 843 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா உயிரிழப்பு சதவீதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 69.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 7,33,000 பேருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளது.