Skip to main content

தி.மு.க  சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியில் கரோனா சிறப்பு மருத்துவமனை!  

Published on 01/06/2021 | Edited on 01/06/2021
Corona Special Hospital at the initiative of the DMK legislator

 

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாகூர் தொகுதி மக்களின் நல வாழ்வுக்காகவும், கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கும் வகையிலும், பாகூர் அரசு பாரதி மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தினை பாகூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார் தனது சொந்த முயற்சியின் மூலம் உருவாக்கியுள்ளார். 

 

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திமுக (தெற்கு)  மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ கலந்து கொண்டு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மையத்தில் உள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டனர்.

 

இந்த மையத்தின் சிறப்பு அம்சமாக  தனிமைப்படுத்தப்பட்ட 25  படுக்கை வசதிகள், இலவச மருத்துவம், இலவச RT-PCR பரிசோதனை, 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர்,  ஆக்சிஜன் படுக்கை வசதி, 3 வேலை ஆரோக்கிய உணவு மற்றும் சிற்றுண்டி, பொது மருத்துவம், மருந்துகள், 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவியுள்ளன.

 

இந்த நிகழ்ச்சியில் பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி உமாசங்கர்,  பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், திமுக முன்னாள் இளைஞரணி தலைவர் முகமது யூனுஸ், பாகூர் தொகுதி செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன், தி.மு.க நிர்வாகி பாஸ்கரன், மாணவரணி கீர்த்தி, எழில், ரிவெஞ்ச் ரவுண்ட் டேபிள் கிளப் தலைவர் தீபக் துகார், செயலாளர் ஆனந்த சுதன், புதுச்சேரி லேடிஸ் கிளப் தலைவி சுரதி தபாஷ், செயலாளர் நிவேதா விஜயரங்கன், ரோட்டரி கிளப் நகர தலைவர் முத்துராமன், செயலாளர் ஜெயப்பிரகாஷ், ரிவெஞ்ச்  ரவுண்ட் கிளப் 41 சர்க்கிள் தலைவர் லட்சுமி நாராயணன் செயலாளர் பாலச்சந்தர் மற்றும் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்