சோன்பத்ராவில் சொத்து தகராறில் கொல்லப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் உபி கிழக்கு பொதுச் செயலாளர் பிரியங்கா கந்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் போலீஸார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்று சாலையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த இடத்தில் சிறிது பரபரப்பு நிலவியுள்ளது.
தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா பேசியபோது, “சோன்பத்ரா சொத்து தகராறில் இறந்தவரக்ளின் குடும்பத்தை பார்க்க வேண்டும். என்னுடன் நான்குபேரை மட்டுமே அழைத்து செல்கிறேன் என்று கூறினேன். ஆனாலும், என்னை பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்று இந்த அதிகாரிகள் கூறுகிறார்கள். ஏன்? எதற்காக?அவர்களை பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதனால் அவர்களை பார்க்க அனுமதிக்கும்வரை நாங்கள் இங்கு அமைதியாக அமர்ந்துகொள்கிறோம்” என்று கூறினார்.
இதனையடுத்து பிரியங்கா காந்தி தனது ஆதரவாளர்களுடன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது பேசிய பிரியங்கா, நாங்கள் பதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றோம். அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. அதனால் அமைதியாக சாலையில் அமர்ந்தோம். தற்போது கைது செய்து கூட்டி செல்கிறார்கள். அவர்கள் எங்கு கூட்டி செல்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அழைத்து செல்லும் இடத்திற்கு செல்கிறோம்” என்றார்.