Published on 12/03/2019 | Edited on 12/03/2019
குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில், தண்டி யாத்திரையின் 89 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதன் பின் இன்று பிற்பகலில் சர்தார் வல்லவாய் படேல் நினைவரங்கில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி தனது முதல் பிரச்சாரத்தைத் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டமானது 50 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் கட்சி குஜராத்தில் நடத்தும் முதல் செயற்குழு கூட்டமாகும். மேலும் இந்த செயற்குழு கூட்டத்துக்கு முன்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முன்னிலையில், படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.