Published on 12/02/2020 | Edited on 12/02/2020
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் , இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சாக்கோ பதவி விலகியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி 2013 ல் ஷீலா தீக்ஷித் முதல்வராக இருந்தபோது தொடங்கியது. அப்போது புதிய கட்சியான ஆம் ஆத்மி காங்கிரஸ் வாக்கு வங்கி மொத்தத்தையும் பறித்தது. எங்களால் அதை இதுவரை திரும்பப் பெற முடியவில்லை. அது இன்னும் ஆம் ஆத்மி கட்சியுடன் தான் உள்ளது" என தெரிவித்துள்ளார்.