ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் உறுதியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்திக்க அவர் கூறியது, ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.
ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல் செயல்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். பிரான்ஸ் அரசுக்கும் அனிலுக்கும் இடையே பிரதமர் மோடி தரகராக செயல்பட்டுள்ளார். ராணுவ ரகசியத்தை காக்க வேண்டிய பிரதமர் அதனை தனிநபரிடம் கூறியுள்ளார். ரபேல் விவகாரம் தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை பயனற்றது. மோடியின் ஆடிட்டர் ஜெனரல் சவுக்கிதார் தான் சி.ஏ.ஜி. அறிக்கையை தயாரித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையில் பிரதமர் மோடி சமரசம் செய்துவிட்டார். தமது குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றார்.