Published on 24/12/2020 | Edited on 24/12/2020

தமிழகத்தைப் போலவே வரும் 2021 ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பாஜக தலைவர்கள் மேற்கு வங்காள சுற்றுப்பயணம், கட்சித் தாவல்கள் என மேற்கு வங்காள அரசியலில் சூடு பறந்து வருகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து சந்திக்கும் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் தேர்தலிலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.