இந்தியாவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மூடப்பட்ட மற்றும் பாதியில் கைவிடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி. இதன் மூலம் கூடுதலாக 380 மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக கிடைக்கும் நிலக்கரி மின் உற்பத்திக் கை கொடுக்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், சுரங்கங்கள் திறக்கப்பட்டதால், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மத்திய அரசின் இத்தகையை நடவடிக்கை மின்உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு கை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.