Skip to main content

கரோனாவைத் தடுக்க சிறுவர்களுக்கு மதுபானம்! (வீடியோ)

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

jh

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. அடுத்து தமிழகத்தில் அதிக அளவு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. கர்நாடகம், டெல்லி, தெலுங்கானா, ஆந்திராவிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

 

 

இந்நிலையில் உலகளவில் கரோனாவுக்கு தடுப்பு மருத்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஒடிசா மாநிலம் பர்னன்பலி கிராமத்தில் கரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிறுவர்களுக்கு சலப்பா மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மதுபானத்தை கிராம மக்கள் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்