உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து விட்ட நிலையில், இன்று ஆறாம்கட்ட வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 மாவட்டங்களில் 57 தொகுதிகளில் ஆறாம்கட்ட வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியும் அடக்கம்.
கோரக்பூரில் உள்ள கோவிலில் காலை சிறப்பு வழிபாடு நடத்திய யோகி ஆதித்யநாத், ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடி ஒன்றில் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர ஆசாத் போட்டியிடுவதால் அந்தத் தொகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தேர்தல் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், அதிக அளவில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும், 80 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார்.