Published on 12/05/2022 | Edited on 12/05/2022
![Case filed against famous Malayalam actor Jojo George!](http://image.nakkheeran.in/cdn/farfuture/DoUNhUa_DYavChf5WR92PTSAnJ_ov9f5zNdbnjYsfX8/1652362685/sites/default/files/inline-images/geor4343443.jpg)
ஜீப் ரேஸில் ஈடுபட்டதற்காக பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் தனுஷின் ஜகமேதந்திரம் படத்தில் நடித்த ஜோஜூ ஜார்ஜ், மலையாள படமான ஜோசப்பில் நடித்ததற்காக தேசிய விருதுப் பெற்றவர். இவர் கேரள மாநிலம், லாகமணியில் உள்ள எஸ்டேட் பகுதியில் நடந்த பந்தயத்தில் தனது ஜீப்புடன் பங்கேற்றார். அவர் வேகமாக ஜீப்பை ஓட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலானது.
விவசாயம் செய்ய அனுமதித்த பகுதியில் எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இல்லாமல், ஜீப் பந்தயத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.