புதுச்சேரி மாநிலத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை நிறைவேற்றுவதற்கும் அனுமதிக்க மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து வந்தநிலையில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேறியது.
கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் என 5 மாநிலங்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்காலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.