Skip to main content

பாதுகாப்பற்றதா சென்னை?... வரமறுத்த வீராங்கனைக்கு சஷி தரூர் பதில்...

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

 

shashi tharoor

 

 

 

 

காங்கிரஸ் கட்சியின் எம்.பி சஷி தரூர், பெண்களுக்கான பாதுகாப்பில் சுவிட்சர்லாந்தை விட சென்னை பாதுகாப்பானது" என்று தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடுகின்றனர். சுவிட்சர்லாந்து அணியும் இதில் கலந்துகொண்டுள்ளது. சுவிட்சர்லாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான அம்ரோ அலின்கீஸ் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

 

 

 

 

இதுகுறித்து சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவிக்கையில்," இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் அம்ரோவின் பெற்றோர் சென்னைக்கு வந்து விளையாட மறுத்துவிட்டனர்" என்றார். 

 

 

இந்நிலையில், இச்செய்தியை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தனது ட்விட்டரில்," இது முரணாக உள்ளது. உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களில் சென்னையையும் ஒன்று. சொல்லப்போனால், சுவிட்சர்லாந்தைவிட சென்னை பாதுகாப்பானது. ஆனால், உண்மையைவிட பொய் வேகமாக பரவுகிறது. பெண்கள் மீதான இந்தியாவின் மதிப்பு குறித்த நம்பிக்கையை உலகளவில் நாம் மீட்டெடுக்க வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.    

        

சார்ந்த செய்திகள்