Skip to main content

முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

ஒடிஷா மாநிலத்தில் தற்போது மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது. இதற்கான முதல் கட்ட தேர்தலில் மாநில சட்டமன்ற மற்றும் சில மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி நடைப்பெற்றது. மேலும் இந்த மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் ஐந்து மக்களவை தொகுதிகளில் நடைப்பெறுகிறது. இந்நிலையில் ஒடிஷா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் நேற்று (16/04/2019) பிரச்சாரம் மேற்கொள்ள ஒடிஷா மாநிலம் ரூர்கேலா பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். 

 

cm


 

cm



அந்த பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அம்மாநில தேர்தல் சிறப்பு அதிகாரிகள் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மற்றும் அவரின் பைகளில் சோதனை செய்தனர். இதனால் ஒடிஷா முதல்வர் தேர்தல் அதிகாரிகள் சோதனை முடியும் வரை ஹெலிகாப்டரிலேயே அமர்ந்திருந்தார். இந்த நடவடிக்கையானது ஒடிஷா மக்களை அதிர்ச்சியடைய செய்தது. ஏனெனில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவராகவும் , ஒடிஷா மாநிலத்தில் நிரந்தர முதல்வரா நவீன் பட்நாயக் அவர்களை அம்மாநில மக்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். எனவே இத்தகைய நடவடிக்கைகளை ஆளுங்கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். 

 

cm



நேற்றைய தினம் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பயணம் செய்த ஹெலிகாப்டர் மற்றும் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது . தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர்களின் சோதனை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த வருமான வரித்துறையின் அதிகாரிகள் புகார்கள் வருவதால் தான் சோதனை நடத்துவதாக தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையம் எந்த கட்சிக்கும் பாரப்பட்சமின்றி செயல்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.


பி.சந்தோஷ். சேலம்.

சார்ந்த செய்திகள்